1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 1 நவம்பர் 2017 (16:40 IST)

நடிகை கடத்தல் வழக்கு ; பல்டி அடித்த முக்கிய சாட்சி : போலீசார் திணறல்

கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய சாட்சி ஒருவர் திலீப்பிற்கு ஆதரவாக பல்டி அடித்திருப்பதால் போலீசார் திணறி வருகின்றனர்.


 

 
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு முக்கிய சாட்சி பல்டி அடித்துள்ளார்.
 
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக போலீசார் கருதுவது பல்சர் சுனிலைத்தான். இந்நிலையில், திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் நடத்தும் துணிக்கடைக்கு பல்சர் சுனில் அடிக்கடி வந்ததாக, அந்த கடையில் பணிபுரியும் ஒரு ஊழியர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.  மேலும், காவ்யா மாதவனின் கார் ஓட்டுனர் ஒருவர், இந்த வாக்குமூலத்தை மாற்றிக்கொள்ளுமாறு தனக்கு 41 முறை தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
 
ஆனால், நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலத்தில், பல்சர் சுனில் யாரென்றே எனக்கு தெரியாது. அவர் காவ்யா மாதவன் நடத்தும் கடைக்கு  வந்ததாக எனக்கு நினைவில் இல்லை. அதேபோல், தன்னை யாரும் 41 முறை தொலைப்பேசியில் அழைத்து பேசவில்லை என பல்டி அடித்துள்ளார்.
 
இது வழக்கின் போக்கையே திருப்பிவிடும் என்பதால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இதனால் திலீப் மீதான போலீசாரின் பிடி தளர்ந்து கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.