மீண்டும் வருகிறாள் ‘மை டியர் லிசா’
30 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘மை டியர் லிசா’ பெயரில் தற்போது ஒரு படம் வெளியாக இருக்கிறது.
1987ஆம் ஆண்டு ‘மை டியர் லிசா’ என்ற பேய்ப்படம் ரிலீஸானது. இந்தப் படம் மலையாளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றதால், தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. ஆனாலும், பார்ப்பதற்கு தமிழ்ப் படம் போலவே இருந்தது. இந்தப் படம்தான், பேய்ப் படங்களின் உச்சம் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது.
30 வருடங்களுக்குப் பிறகு, இதே பெயரில் ஒரு படம் உருவாகிறது. ‘சென்னை 28’ மூலம் சினிமாவில் அறிமுகமான விஜய் வசந்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். ரஞ்சன் கிருஷ்ணதேவன் என்பவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.