வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (15:33 IST)

காசினி விண்கலம் இன்று அழியும்; நாசா தகவல்

சனிக்கோளை ஆராய நாசா அனுப்பிய விண்கலம் காசினி தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அழியும் என்று நாசா தகவல் வெளியிட்டுள்ளது.


 

 
நாசா விண்வெளி ஆய்வு மையம் சனிக்கோளை ஆராய காசினி என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம், சனிக்கோளின் வளையத்தை தாண்டி அந்தக் கோளின் 15000 கி.மீ. தொலைவில் உள்ளது. அதன் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. 
 
இந்நிலையில் இன்று காசினி விண்கலம் சனிக்கோளின் மீதே மோதி அழியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இறுதிக்கட்டமாக இதுவரை கிடைக்காத புகைப்படங்களை காசினி நாசாவுக்கு அனுப்பி வந்தது. இந்நிலையில் சனிக்கோள் மீதே அந்த செயற்கைக்கோள் மோதி அழியும். அதன் பாகங்கள் வெப்பத்தில் கருகிவிடும்.