திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By sivalingam
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2017 (00:37 IST)

சனி கிரகத்திற்கு செல்கிறார் எமிஜாக்சன்

அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக புகழ்பெற்று விளங்கும் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று 'சாட்டர்ன் கேர்ள். இந்த தொடரின் மூன்றாம் பாகம் விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் சனிக்கிரகத்து பெண்ணாக நடிக்க எமிஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.



 
 
சனி கிரகத்தின் நிலவுகளில் ஒன்றில் பிறக்கும் சனிப்பெண், பூமிக்கு வந்து மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள ஒரு ஆபத்தில் இருந்து காப்பதே இந்த தொலைக்காட்சி தொடரின் கதை. இந்த தொடரின் முக்கிய வேடம்தான் இம்ரா அதீன் என்ற சனிப்பெண்.
 
இந்த கேரக்டருக்கு பல ஹாலிவுட் நடிகைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது எமிஜாக்சன் உறுதி செய்யப்பட்டுள்ளார். ரஜினியின் '2.0' படத்திற்கு பின்னர் எமிஜாக்சனுக்கு இந்திய மார்க்கெட்டிலும் சூடுபிடிக்கும் என்பதால் இந்த தொடர் தமிழ் உள்பட ஒருசில மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.