1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 ஜூன் 2020 (13:01 IST)

நவம்பரில் கொரோனா உச்சமா? அது போலி செய்தி! – ஐசிஎம்ஆர் மறுப்பு

இந்தியாவில் நவம்பர் மாதத்தில் கொரோனா உச்சம் அடையும் என ஐ.சி.எம்.ஆர் கூறியதாக வெளியான தகவல் போலியானது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தற்போது உலக அளவில் அளவில் அதிமான கொரோனா பாதிப்புகளை கொண்ட நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் கொரோனா உச்சத்தை அடையும் என தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் இந்த தகவலை இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்துள்ளது. ஐஎம்சிஆர் மேற்கண்டவாறு எந்த ஆய்வுகளையும் செய்யவில்லை என்றும், மருத்துவ கவுன்சிலால் வெளியிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் போலியானவை என்றும் மருத்துவ கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.