வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 ஜூன் 2020 (12:44 IST)

பினராயி விஜயனின் மகளுக்கு திருமணம் – உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி!

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகளுக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு, அம்மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இப்போது அவரது மகளுக்கு மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

அவரது மகள் வீணாவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் முகம்மது ரியாஸுக்கும் இன்று திருமணம் நடந்தது. அந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.