வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 15 ஜூன் 2020 (12:07 IST)

இதையெல்லாம் எப்போ செய்ய போறீங்க? – தமிழக அரசுக்கு ஸ்டாலினின் 5 கேள்விகள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஐந்து கேள்விகளை முன்வைத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் கொரோனா பாதிப்புகளும், இறப்பு எண்ணிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்நிலையில் அரசு கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைப்பதாக திமுக குற்றம் சாட்டியது, ஆனால் இந்த குற்றசாட்டை முதல்வர் மறுத்துள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசிடம் முக்கியமான ஐந்து கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் கேட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். அவையாவன
  1. தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் ஆகவில்லை என்றால் பாதிப்புகள் அதிகரிப்பது ஏன்?
  2. கொரோனாவை அறவே ஒழிப்போம் என தொடர்ந்து பொய் பேட்டிகளை தருவதை தவிர்த்து, முறையான செயல்திட்டம் எப்போது அமைப்பீர்கள்?
  3. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் செயல்திட்டத்தை எப்போது வெளியிடுவீர்கள்
  4. இதுபோன்ற பேரிடர் காலத்தில் கூட முக்கிய எதிர்க்கட்சிகளை கலந்து அலோசிக்க தயங்குவது ஏன்?
  5. தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் அரசு ஆர்வம் காட்டுவது எப்போது?
 
இவ்வாறாக மக்களின் சார்பாக இந்த ஐந்து கேள்விகளையும் கேட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.