செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 ஜூன் 2020 (11:32 IST)

தமிழகத்தில் கொரோனா பரவ அரசுதான் காரணம்! – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கொரோனா வீரியமாக பரவ அரசின் அலட்சியமே காரணம் என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் கொரோனா பாதிப்புகளும், இறப்பு எண்ணிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்நிலையில் அரசு கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைப்பதாக திமுக குற்றம் சாட்டியது, ஆனால் இந்த குற்றசாட்டை முதல்வர் மறுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று நேரலையில் பேசி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசின் கொரோனா தடுப்பு செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பி வருகிறார். அதில் “தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததற்கு அரசின் அலட்சிய போக்கே காரணம். இந்தியாவின் மொத்த நோய் தொற்றில் 10% சென்னையில்தான் உள்ளது. கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அரசு 236 கொரோனா இறப்புகளை மறைப்பதாக தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாகவில்லை என்றால் பாதிப்பு அதிகமாவது ஏன்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.