செவ்வாய், 23 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2019 (14:31 IST)

ஆடையால் சாலையைக் கூட்டிப் பெருக்கும் நபர் : வைரலாகும் வீடியோ

ஆடையால் சாலையைக் கூட்டிப் பெருக்கும்  நபர் : வைரலாகும் வீடியோ
மஹாராஸ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தான் உடுத்தியிர்ந்த ஆடையால், சாலையை கூட்டி, பெருக்கி, சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் தற்பொழுது வைரலாகிவருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கல்யாண் இவர் சமூக ஆர்வலராக உள்ளார். இந்நிலையில் சாலையில் பயணிக்கும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் , சாலையில் படர்ந்திருக்கும் மணல்களால் கீழே விழ நேரிடுகிறது. இதனால் பலர் பாதிக்கபடுகின்றனர்.
ஆடையால் சாலையைக் கூட்டிப் பெருக்கும்  நபர் : வைரலாகும் வீடியோ
இதனை பார்த்த கல்யாண், இனிமேல் யாரும் இந்த சாலையில் தேங்கியுள்ள மணலால் விபத்தில் சிக்கக் கூடாது என்பதற்காகவே இவர், தினமும் அங்குள்ள பிரசித்தி பெற்ற சாலைக்குச் சென்று தான் அணிந்திருந்த பேண்டை கழற்றி அதிலேயே சாலையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
 
கல்யாணின் செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்துவருகின்றனர்.