வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 24 ஜூன் 2019 (15:21 IST)

கேமராவில் சிக்கிய ராட்சத கடல் விலங்கு – வைரலான வீடியோ

கடலுக்கடியில் கேமராவை உணவென்று நினைத்து சாப்பிட வந்த ராட்சச கடல் விலங்கு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடலுக்கடியில் காணப்படும் அபூர்வ வகை ஜெல்லி மீன்கள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக மெக்ஸிகோ அருகே ஆழ்கடலில் ஆராய்ச்சி செய்தனர் சில விஞ்ஞானிகள். கடலின் இருள் பகுதியில் வாழும் அந்த ஜெல்லி மீனானது சாதாரண கண்களால் பார்க்கமுடியாதது. எனவே அதை படம் பிடிக்க பிரத்யேகமான ஆழ்கடல் கேமரா ஒன்றை கடலுக்கடியில் அனுப்பினர்.
அதில் கடலுக்கடியில் உள்ள காட்சிகளை நேரடியாக பார்க்க முடியும். அப்போது கேமாராவில் பதிவான காட்சிகள் ஆராய்ச்சியாளர்களை திக்குமுக்காட செய்தது. தூரத்தில் புகை போல ஏதோ தெரிந்தது. கிட்ட வர வர ஒரு புழு நெளிவதை போல தெரிந்த அந்த உருவம் திடீரென விரிந்து பல கால்களையுடைய ஆக்டோபஸ் போல மாறியது. கேமராவை சுற்றி வளைத்த அந்த உருவம், அது உண்ண கூடிய பொருள் இல்லை என தெரிந்ததும் விட்டுவிட்டு போய்விட்டது.

இதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் இதுவரை அந்த உயிரினத்தை மனிதர்கள் யாரும் பார்த்ததே இல்லை. ஆக்டோபஸ் போல பல கால்களை கொண்ட அந்த மிருகம் கணவாய் மீன் வகையை சார்ந்தது. அதன் உயரம் சுமார் 12 அடிக்கும் மேல் இருக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த மிருகம் கடலின் ஆழமான அகழிப்பகுதிகளில் வாழ்வதாகவும், சுறாமீன், திமிங்கலங்களையே உண்ணும் அளவிற்கு பெரிய அளவில் இந்த விலங்குகள் பெரியதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இது அந்த ராட்சத விலங்கு வகையை சார்ந்த சின்ன விலங்காக இருக்கலாம் என கூறப்படுகிறது.

எது எப்படியிருந்தாலும் மனிதன் காணவே முடியாத பல அதிசயங்களை கடல் தன்னுள்ளே ஒளித்து வைத்துள்ளது என்பது மட்டும் இதன் மூலம் தெளிவாகிறது. 12 அடி ராட்சத விலங்கு கேமராவில் தோன்றும் காட்சியை பலர் பிரமித்து பார்த்து வருகின்றனர்.