வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 ஜூன் 2019 (19:28 IST)

கண்ணிமைக்கும் நொடியில் பற்றி எரிந்த பெண் – பதற வைக்கும் வீடியோ காட்சி

பெண் ஒருவர் கோவில் ஒன்றில் சாமி கும்பிட்டுவிட்டு வரும்போது தீப்பற்றி எரிந்த வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள ஹூப்ளி என்னும் பகுதியில் கோவிலில் சாமி கும்பிட்டுள்ளார் பெண் ஒருவர். அப்போது அவர் புடவையில் தீ பற்றியது. அவர் தீயை அணைக்க முயல அது வேகமாக புடவையெங்கும் பரவியது. இதனால் புடவையை அவிழ்த்து விட்டெறிந்து கொண்டே ஒரு அறைக்குள் ஓடினார் அந்த பெண்.

வாளியில் தண்ணீரை எடுத்து கொண்டு போய் பெண்ணின் மீது பரவிய தீயை அணைத்தனர் பொதுமக்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அந்த பெண்.

அந்த பெண் பற்றி எரிந்த பதற வைக்கும் வீடியோ காட்சிகள் பார்ப்போர் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.