வாசனை, சுவை தெரியவில்லை எனில் கொரோனா அறிகுறி - மத்திய சுகாதாரத்துறை
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவி வரும் கொரோனா தொற்றினால் பல எழுபதுலட்சத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இந்தியாவில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 49.95 சதவீதமாக உள்ளது எனவும் கடந்த 24 மணி நேரத்தில் 7,135 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் எனவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் வாசனை, சுவை தெரியவில்லை எனில் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் :
காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி, வயிற்றுப்போக்கு இருந்தால் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.