சுவையான பரங்கிக்காய் பாயசம் செய்வது எப்படி...?

Parangikai Payasam
Sasikala|
தேவையான பொருட்கள்:
 
பரங்கிக்காய் - 2 கப் (துருவியது)
பால் - 500 மிலி
வெல்லம் - 1 1/2 கப் (துருவியது)
தேங்காய் துருவல் - அரை கப்
முந்திரி, திராட்சை, சாரை பருப்பு, நெய் - தேவையான அளவு
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்

செய்முறை:
 
தேவையானப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். பாலை நன்கு காய்ச்சிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் துருவிய பரங்கிக்காய் போட்டு, சிறிது தண்ணீர்  விட்டு 5- 6 நிமிடங்கள் வைத்து வேகவைத்துக்கொள்ளவும்.
 
ஒரு கடாயில், நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, சாரை பருப்பு போட்டு வறுத்து கொள்ளவும். பால் காய்ந்ததும், வேகவைத்த பரங்கிக்காயை சேர்க்கவும். பாலுடன்  கலந்து நன்கு கொதிக்க விடவும். பின்னர், துருவிய வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் கரைந்து பாயசத்துடன் நன்கு கலக்க வேண்டும். இதனுடன் தேங்காய்  துருவல் சேர்க்கவும்.

Parangikai Payasam 1
இப்போது நெய்யில் வறுத்து வைத்துள்ள பருப்புகள் மற்றும் திராட்சையை சேர்க்கவும். கடைசியில் வெனிலா எசன்ஸ் சில துளிகள் சேர்க்கவும். இல்லையெனில் ஏலக்காய் சேர்க்கலாம். சுவையான பரங்கிக்காய் பாயசம் தயார்.
 
பரங்கிக்காய் உடம்புக்கு ரொம்ப நல்லது. பொரியல், குழம்பை விட பாயசம் செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். பரங்கிக்காய் பிடிக்காதவர்களுக்கும்  இந்த பாயசம் பிடிக்கும். பரங்கிக்காயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பரங்கிக்காய் ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கும்  ரொம்ப நல்லது.


இதில் மேலும் படிக்கவும் :