1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (08:51 IST)

கொரோனா பாதித்தவர்கள் எச்சில் துப்பினால் கொலைமுயற்சி வழக்கு! – டிஜிபி எச்சரிக்கை!

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களை நோக்கி எச்சில் துப்பினால் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என இமாச்சல பிரதேச டிஜிபி எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளன. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் வெளியே திரிவதால் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு, காவல்துறையும் ஆலோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் கொரோனா பாதித்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவ பணியாளர்கள் அழைத்து சென்றபோது அவர் அதற்கு ஒத்துழைக்காமல் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் கொரோனா பாதிப்புள்ளவர் யார் மீதாவது துப்பினால் அது கொலைமுயற்சி வழக்காக பதி்வு செய்யப்படும் என அம்மாநில டிஜிபி கூறியுள்ளார். எதிர் நபர் அதனால் கொரோனா பாதிப்புக்கு உள்ளானால் அது கொலை வழக்காக பதியப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.