புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 6 ஏப்ரல் 2020 (20:37 IST)

'’ஏழை மக்களின் வாழ்க்கையை அடித்து பிடுங்கியது...’’மோடிக்கு , கமல்ஹாசன் கடிதம் !

நடிகரும் மக்கள் நீதி மய்யம் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,இன்று பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், எந்தவொரு முறையான திட்டமிடல் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும், அடுத்த வேளை சமைப்பதற்கு தேவையான எண்ணெய் இல்லாத மக்கள் எப்படி விளக்கு ஏற்ற முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தக் கடிதத்தை பதிவிட்டு, அதை பிரதமருக்கு டேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும், கமல்ஹாசன் பிரதமருக்கு ஒரு கடிதம் தமிழில்  எழுதியுள்ளார்.

அதில், ஒரு பொறுப்பான குடிமகனாக இரண்டாவது கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
மார்ச் 23 அன்று நான் எழுதப்பட்ட முதல் கடிதத்தின்நோக்கம் நாட்டில் உழைப்பாளர்களின் உழைப்பு கண்டுகொள்ளப்படாமல் இருக்க கூடாது எனபதுதான். ஆனால் நான் எழுதியதற்கு அடுத்தநாள் லாக்டவுன் என்ற மிக கடுமையான ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. லாக் டவுன் பற்றி புரிந்துகொள்ளகூட அவகாசம் தராமல், டீமனிஸ்டேசன் போன்றே இதையும் நாடு கேள்விப்பட்டது.

உங்கள் நானாகிய நானும் இப்பேரிடர் காலத்தில் உங்கள் வழிகாட்டுதலின் படி செல்ல தயாராக உள்ளேன். இன்றைய சூழலில் உங்களுக்கு அமைந்த கூட்டம்போல வேறு எந்த நாட்டு தலைவருக்கும் இல்லை. நீங்கள் சொன்னாலே அக்கூட்டன் கேட்கிறது. இன்றைய சூழலில் இந்த தேசமே நம்பிக்கையுடன் எழுந்துநின்று பிரதமர் அலுவலம் சொல்வதை கேட்பதை தயாராக உள்ளது.

ஆனால் டீமணிஸ்டேசனின் போது நடைபெற்ற தவறு இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டீமணிஸ்டேசன் ஏழை அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அடித்து பிடுங்கியது. சரியான திட்டமிடப்படாத இந்த லாகடவுன் ஆபத்தை நோக்கிச் செல்லுகின்றது என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.