ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2024 (11:08 IST)

பாஜக மீண்டும் ஆட்சிக்கு இளைஞர்களுக்கு திருமணம்கூட நடக்காது: அகிலேஷ் யாதவ்

akilesh
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு திருமணம் கூட நடக்காது என்று முன்னாள் உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால் பல இளைஞர்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்றும் இன்னும் பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் இந்தியாவில் உள்ள ஒரு இளைஞருக்கும் திருமணம் நடக்காது என்றும் அகிலேஷ் விமர்சனம் செய்துள்ளார் 
 
மக்களவைத் தேர்தல் எனக்கு மட்டும் இன்றி நாட்டின் எதிர்காலத்திற்கானது என்றும் ஜனநாயகத்திற்கான தேர்வு என்றும் ஜனநாயகம்  வென்றால் மட்டுமே நமக்கு கிடைத்த உரிமைகள் நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்தார் 
 
இன்னும் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்தால் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகி அவர்களுக்கு திருமணம் கூட நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
 
Edited by Mahendran