ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (10:43 IST)

டார்கெட்டை விட அதிகம்: தடுப்பூசி முகாமிற்கு அமோக வரவேற்பு

டார்கெட்டை விட அதிகம்: தடுப்பூசி முகாமிற்கு அமோக வரவேற்பு
மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாமில் திட்டமிட்டதை தாண்டி 24,85,814 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறாக நேற்றும் தடுப்பூசி முகாம் இரவு 8 மணி வரை தொடர்ந்தது நடைப்பெற்றது.
 
இந்நிலையில் மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாமில் மொத்தம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இயக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டதை தாண்டி 24,85,814 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. சென்னையில் மட்டும் 2,13,763 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ட்ரல், பட்டாளம், அயனாவரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.