தொடர்புடைய செய்திகள்
- மன்மோகன்சிங் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
- பள்ளிகளில் புகார் பெட்டி அமைக்க வேண்டும்! – பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு!
- ’’பள்ளிகள் திறந்த உடன் சத்துணவு’’- தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
- 20 ஆண்டுகள் அரியர் வைத்திருக்கும் மாணவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு வாய்ப்பு!
- பள்ளிகள் திறப்பு இல்லை – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது? முதல்வர் இன்று ஆலோசனை!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன என்பதும் கல்லூரிகளுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விரைவில் திறக்கும் என்று கூறப்படும் நிலையில் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார்
மேலும் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை திறப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை இன்று அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
