ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 2 ஜூன் 2019 (20:12 IST)

ரூபாய் நோட்டில் இருந்து காந்தியை நீக்க வேண்டும்: பெண் ஐஏஎஸ் அதிகாரியின் சர்ச்சை பதிவு

மகாத்மா காந்தியின் உருவத்தை ரூபாய் நோட்டில் இருந்து நீக்க வேண்டிய நேரம் இது என்று பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் சமூக வலைத்தள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் நிதி சவுத்ரி. இவர் தன்னுடிய டுவிட்டரில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை யொட்டி நடக்கும் கொண்டாட்டங்கள் வழக்கத்தில் இல்லாதது என்றும், காந்தியின் உருவத்தை ரூபாய் நோட்டில் இருந்து நீக்க வேண்டிய நேரம் இதுதான் என்றும், உலகில் உள்ள காந்தியின் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
அதுமட்டுமின்றி மகாத்மாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி இதுவாகத்தான் இருக்கும் என்றும், காந்தியை சுட்டு கொலை செய்த கோட்சேவுக்கு நன்றி என்றும் தெரிவித்திருந்தார்.
 
நிதி சவுத்ரியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நிதி சவுத்ரியை உடனடியாக சஸ்பெண்ட் செய்து அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது
 
இந்த நிலையில் டுவீட் திரித்து புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும், காந்தியை ஒருபோதும் மரியாதை குறைவாக பேசியதில்லை என்றும் நிதி சவுத்ரி தெரிவித்துள்ளார்.