ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 மே 2024 (17:08 IST)

எலெக்‌ஷன் ரிசல்ட் அன்னைக்கு என்னை யாரும் பார்க்க முடியாது! – பிரதமர் மோடி எடுத்த திடீர் முடிவு!

Modi PM
மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அன்று தான் என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



நாடு முழுவதும் பல கட்டங்களாக நடந்து வரும் மக்களவை தேர்தலின் கடைசி கட்டம் ஜூன் 1ம் தேதியுடன் முடிவடைகிறது. அதை தொடர்ந்து ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. கடந்த ஏப்ரல் தொடங்கி இரண்டு மாத காலமாக நாடு முழுவதும் தேர்தல் அலை வேகமெடுத்திருந்தது. இந்த முறை மீண்டும் 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்குமா? அவர்கள் நிர்ணயித்த 400 தொகுதிகள் தனிப்பெரும்பான்மை நிலையை எட்டுமா? என்ற கேள்விகளும் உள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்தபோது பிரதமர் மோடி இமாலயம் சென்று தியானத்தில் ஆழ்ந்தார். இந்நிலையில் இந்த முறை கன்னியாக்குமரியில் இரண்டு நாட்கள் தியானம் செய்ய உள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடியிடம் தேர்தல் முடிவுகளின்போது உங்களது மனநிலை எப்படி இருக்கும் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி “தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும் என்ற விவரங்களில் இருந்து நான் தள்ளியே இருப்பேன். வாக்கு எண்ணிக்கை நாளன்று ஆன் யாரையும் எனது அறைக்குள் அனுமதிக்கமாட்டேன். என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்க மாட்டேன். அன்று நான் தியானம் செய்வதை அதிகரிப்பேன்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K