ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 29 மே 2024 (14:07 IST)

’கூலி’ படத்தில் நடிக்கிறேன்.. ‘மோடி’ படத்தில் நடிக்கவிலை.. ஆனால்.. சத்யராஜ் பேட்டி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் கூலி படத்தில் நடிக்கிறேன் என்று கூறிய சத்யராஜ் மோடி படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் மோடி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இந்த இயக்குனர்கள் இயக்கினால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். 
 
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான ’மழை பிடிக்காத மனிதன்’ என்ற திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு என்று சென்னையில் நடந்தது. அப்போது ரஜினி நடிக்கும் கூலி படத்தில் நடிப்பதாக கூறிய சத்யராஜ், சல்மான்கான் படத்தில் வில்லனாக நடிக்கிறேனா என்பதை என்னால் இப்போது சொல்ல முடியாது என்றும் கார்ப்பரேட் விதிகளின் படி அவர்கள் தான் முறைப்படி அறிவிப்பார்கள் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என்றும் கூறிய சத்யராஜ் , ஆனால் அதே நேரத்தில் மணிவண்ணன் போன்றவர்கள் மோடி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கினால் உண்மையை சொல்வார்கள் என்றும் அவர் கூறினார். 
 
தற்போதைய இயக்குனர்களில் விஜய் மில்டன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர் மோடி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். 
 
Edited by Mahendran