ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 29 மே 2024 (15:22 IST)

கடவுள் எப்போதும் அரசியலில் ஈடுபட மாட்டார்.. மோடி குறித்து மம்தா பானர்ஜி பேச்சு..!

பிரதமர் மோடி சமீபத்தில் தான் கடவுளால் அனுப்பப்பட்ட அவதாரம் என்று கூறிய நிலையில் கடவுள் எப்போதும் அரசியலில் ஈடுபட மாட்டார் என்றும் கடவுள் எப்போதும் கலவரத்தை தூண்டிவிட மாட்டார் என்றும் மேற்குவங்க முதலமைச்சர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடவுள் தான் தன்னை அனுப்பி வைத்ததாக பிரதமர் மோடி கூறுகிறார், மோடி கடவுள் என்றால் அவர் அரசியலில் ஈடுபடக்கூடாது, கடவுள் கலவரத்தை தூண்டி விடக்கூடாது, அவருக்கு கோயில் கட்டுவோம். பூக்கள் போன்றவற்றை வழங்குவோம்.
 
நான் பிரதமர்கள் பலருடன் பணியாற்றி உள்ளேன், வாஜ்பாய், மன்மோகன் சிங், ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் ,தேவகவுடா ஆகியோருடன் பணியாற்றி உள்ளேன், ஆனால் இவரை போன்ற பிரதமரை நான் பார்த்ததே இல்லை
 
இந்த மாதிரியான ஒரு பிரதமர் நமக்கு வேண்டவே வேண்டாம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது மம்தா பானர்ஜி கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran