திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஜூலை 2020 (11:55 IST)

”கொரோனாவை அதிசய சக்தியால் குணப்படுத்துவேன்” – ஊரை ஏமாற்றிய ”கொரோனா பாபா” கைது

ஹைதராபாத்தில் கொரோனாவை அதிசய சக்தி மூலமாக குணப்படுத்துவதாக ஏமாற்றி வந்த “கொரோனா பாபா” கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவுக்கு எதிரான மருந்துகளை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது, இந்நிலையில் கொரோனாவை குணப்படுத்துவதாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றும் கூட்டமும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் ஹைதராபாத்தில் கொரோனாவை தனது அதிசய சக்திகள் மூலமாக ஒருவர் குணப்படுத்துவதாக வதந்திகள் வெளியானது. இதுகுறித்து பலருக்கும் வாட்ஸப் மூலமாக மெசேஜ் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் கொரோனாவை குணப்படுத்தும் “கொரோனா பாபா” என்று சொல்லி சுற்றித்திரிந்த ஆசாமியையும், அவரது உதவியாட்களையும் கைது செய்துள்ளனர். இவர்கள் கொரோனாவை குணமாக்குவதாக கூறி மக்களிடம் 30 ஆயிரம் வரை ஏமாற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.