1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

சச்சினுக்குப் பிறகு இவர் ஆட்டத்தைதான் நான் ஆர்வமாக பார்க்கிறேன்… இளம் வீரரைக் கொண்டாடிய கவாஸ்கர்

இந்திய அணிக்காக உம்ரான் மாலிக் லிமிடெட் ஓவர் போட்டிகளில் களமிறங்கி் கவனத்தை ஈர்க்கும் விதமாக விளையாடி வருகிறார்.

கடந்த ஆண்டே தனது அதிவேகப் பந்துகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் உம்ரான் மாலிக். இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் மெருகேறி பேட்ஸ்மேன்களை திணறவைத்து வருகிறார்.  இதையடுத்து அவருக்கு இந்திய அணியில் சில போட்டிகள் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. தற்போது பங்களாதேஷ் அணிக்கான தொடரில் விளையாடி வருகிறார்.

அவரின் பந்துவீச்சின் போது பேசிய முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் “சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்துக்குப் பிறகு இவரின் ஆட்டத்தை நான் ஆர்வமாக பார்க்கிறேன்” எனக் கூறி அவரைக் கொண்டாடியுள்ளார். உம்ரான் மாலிக் 140 மற்றும் 150 கிமி வேகங்களில் பந்துவீசி அசத்தி வருகிறார்.