1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified வெள்ளி, 16 டிசம்பர் 2022 (21:06 IST)

சாலையில் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞருக்கு சிறைத் தண்டனை!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தன் பிறந்த நாளை கொண்டாடிய இளைஞருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டடுள்ளது.
 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சந்தோஷ்  நகரில் உள்ள தர்கா பர்ஹானாவில் வசித்து வருபவர் மஜீத் அலிகான்.

இவர்  கடந்த  நவம்பர் 13 ஆம் தேதி தன் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட விரும்பினார்.

எனவே, ஒரு முக்கிய சாலையில் தன் நண்பர்கள், குடும்பத்தினரை அழைத்து பிறந்த நாள் நிகழ்ச்சியை நடத்தினார்.

முக்கிய சாலையை மறித்து, நிகழ்ச்சி நடத்தி மக்களுக்கு இடையூறு செய்ததாக  அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மஜீத் அலிக்கு 5 நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Edited By Sinoj