செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (18:06 IST)

முதலிரவு முடிந்த வுடன் நகை, பணத்துடன் கணவன் தப்பியோட்டம்

முதலிரவு முடிந்த வுடன் நகை, பணத்துடன் கணவன் எஸ்கேப் ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மா நிலம் ஆழப்புலாவில் உள்ள காயங்க்குலளத்தைச் சேர்ந்தவர்  அஸ்கருதீன் ரஷீது. இவருக்கும் பழங்குலம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே31 ஆம் தேதி  திருமணம் நடந்தது. பின்னர் இவருக்கும் முதலிரவு நடந்தது . இதையடுத்து முதலிரவு முடிந்த அடுத்த நாள் மணப்பெண்ணின் நகை பணத்துடன் கணவர் தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து மணப்பெண் வீட்டார் போலீஸில் புகார் அளித்தனர். அப்போதும் அஸ்கருதீன்  முதல் திருமணத்தை மறைத்து, 2 வது திருமணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஏற்காட்டில் முதல் மனைவியின் வீட்டில் இருந்த அவரைக் கைது செய்தனர்.