புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (19:11 IST)

கேரளாவில் 55 ஆயிரத்தை நெருங்கிய இன்றைய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த போது கூட கேரளாவில் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று கேரளாவில் 55 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு நெருங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 54 ஆயிரத்து 537 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
மேலும் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களில் 30 ஆயிரத்து 225 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும், இன்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 பேர் என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை  3,33,447  என அறிவிக்கப்பட்டுள்ளது