1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 ஜனவரி 2022 (18:36 IST)

தொடர்ந்து 50 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு: கேரள மக்கள் அதிர்ச்சி

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த போதிலும் கேரளாவில் மட்டும் தினமும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கேரளாவில் இன்று ஒரே நாளில் 51,570  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 பேர் என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் தற்போது கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 3,54,595 என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது 
 
முழு ஊரடங்கு இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் கேரளாவில் பிறப்பிக்கப்பட்டு இருந்தபோதிலும் கேரளாவில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவது அம்மாநில மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது