திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (23:14 IST)

மனைவிக்கு சேலை கட்ட தெரியாததால் கணவர் தற்கொலை !

அவுரங்கபாத் அருகே மனைவிக்குப் புடவை கட்டத்தெரியாததால் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அருகில், முகுந்த நகரில் வசித்து வருபவர் சபேல் (24). இவர் 6 மாதங்களுக்கு முன் தன்னைவிட சுமார் 6 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில்  நேற்று தன் வீட்டில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், என் மனைவிக்கு சேலை கட்டத் தெரியவில்லை. அவளுக்கு எப்படி நடப்பது என்றும் மற்றவர்களிடம் எப்படிப் பேசுவதென்றும் தெரியவில்லை. அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அலஹாபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.