ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 மே 2022 (14:37 IST)

அன்னையர் தினம் போல மனைவியர் தினம்..! – அமைச்சர் வைத்த கோரிக்கை!

Ramdas Athwale
இந்தியாவில் அன்னையர் தினம் போல மனைவியருக்கும் தினம் கொண்டாட வேண்டும் என ஒன்றிய அமைச்சர் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதும் அறிவியல் தொடங்கி ஆன்மீகம் வரை அனைத்திற்கும் தனித்தனி நாட்கள் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. இவ்வளவு ஏன் உலக பீட்சா தினம் போன்ற நூதனமான தினங்களும் கூட கொண்டாடப்படுகின்றன. அப்படியிருக்க மனைவியர்களுக்கு ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும் என ஒன்றிய அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே “நம்மை பெற்றெடுத்து நமக்கு வாழ்க்கை உருவாக்கி தந்தவர் தாய். ஆனால் நல்லது, கெட்டது என அனைத்திலும் நம்முடன் இருப்பவர் மனைவி. ஒவ்வொரு ஆண்மகனின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார். எனவே மனைவியர் தினம் கொண்டாடப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.