செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (17:23 IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை... தாய் - காதலன் கைது .. திடுக் தகவல்

வேலூர்  மாவட்டம அரியூரில் 2 வயது சிறுமிக்கு உடல் முழுவதும்  சிகரெட்டால் சூடுவைத்து கொடுமை செய்த தாய் -  அவரது காதலன் ஆகியோரை போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் அரியூரில் என்ற பகுதியில் பெண் ஒருவர் தனது கணவனை பிரிந்து வாழ்த்துவருகிறார். இவருக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. தன்னுடன் வீட்டில் குழந்தையை வந்தார். இந்நிலையில் தன் தாயிடம் குழந்தையைவிட்டு அருகிலுள்ள செல்போன் கடைக்கு வேலைக்குச் சென்றுவந்த நிலையில் உடன்வேலை பார்க்கும் உதயகுமார் என்பவருடன் காதல் ஏற்பட்டது. அதனால் இருவரும் பல இடங்களில் சுற்றி வந்தனர்.
 
இந்நிலையில் அடிக்கடி  பெண்ணின் வீட்டுக்கு உதயகுமார் வரும்போது, சிறுமி இருப்பதை இடையூராக கருதியுள்ளார். அதனால் இருவரும்   அடிக்கடி சண்டையிட்டுள்ளனர். 
 
இந்நிலையில் சிறுமியின் உடலில் உதயகுமார் சூடு வைத்துள்ளார். எனவே இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் குழந்தை பாதுகாப்பு மைய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில் தாயை உடனடியாக காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து உதயகுமாரை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.