1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 ஜூலை 2019 (11:07 IST)

இனிமே ‘அது’ பண்ணாதான் திருமணம் பண்ண முடியுமாம்..சர்ச்சையான சட்டத்தால் மக்கள் அதிர்ச்சி

திருமணத்திற்கு முன்பு, மணமக்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக கோவா அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும், கடந்த 10 ஆண்டுகளாக, எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை, பொதுமக்களுக்கு கொண்டு செல்வதற்காக பல வழிமுறைகளை மாநில அரசுகளும், மத்திய அரசுகளும் கையாண்டு வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது, கோவா மாநிலத்தில் திருமணம் செய்யவிருக்கும் தம்பதிகள், எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதை கட்டாயமாக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை, கோவாவின்ப் சுகாதாரத் துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே உறுதிசெய்துள்ளார்.

இது குறித்து கோவாவின் சுகாதாரத் துறை அமைச்சர், இந்த சட்டத்திற்கு மாநில சட்டத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது எனவும், வரும் மழைக் கால கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

மாநில அரசு, இவ்வாறு சட்டம் பிறப்பிக்கப்போகும் செய்தி, கோவா மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், சிலர் பாராட்டுகளையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.