செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 10 ஜூலை 2019 (21:04 IST)

கர்நாடகாவை அடுத்து கோவாவிலும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சியாக குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் ஆட்சி நடைபெற்று கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென அங்கு காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து வருவதால் ஆட்சி கவிழும் நிலை உள்ளது
 
இந்த நிலையில் கர்நாடகாவை அடுத்து கோவா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு தற்போது பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோவாவில் காங்கிரஸ் கட்சியில் மாபெரும் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும்,  காங்கிரஸ் கட்சியின் 17 எம்எல்ஏக்களில் 10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\
 
கோவா மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 13 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, இதர கட்சிகளின் ஆதரவால் ஆட்சி அமைத்தது. 17 தொகுதிகளில் வெற்றி பெற்றும் 4 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லாததால் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் தற்போது 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் காங்கிரஸ் வட்டாரங்கள் அதிர்ச்சியில் உள்ளன.