1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (14:34 IST)

கோமாவில் இருந்த குழந்தை உயிரிழந்ததால் மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்ற பெற்றோர்!

baby
கோமாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை உயிரிழந்ததால் அந்த குழந்தையின் பெற்றோர் மருத்துவமனையிலேயே குழந்தையை விட்டுவிட்டு தலைமறைவாகி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை பள்ளிப்பட்டு என்ற பகுதியை சேர்ந்த திலீப்குமார் ஹேமலதா தம்பதிக்கு என்ற இரண்டு வயது குழந்தை இருந்தது.ல் இந்த குழந்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் தவறி விழுந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர்
 
மருத்துவமனையில் குழந்தை கோமா நிலையில் இருந்ததை அடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி குழந்தை இறந்த நிலையில் திடீரென பெற்றோர் யாரிடமும் சொல்லாமல் தலைமறைவாகி உள்ளனர்
 
இதனையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran