1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (18:36 IST)

விக்னேஷ் சிவனுக்கு காதலுடன் நன்றி தெரிவித்த நயன்தாரா!

Nayanthara
நடிகை நயன்தாரா நடித்த கனெக்ட் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர்களுக்கும், இயக்கிய இயக்குநருக்கும் மற்றும் தயாரித்த தயாரிப்பாளருக்கு தனது நன்றி என நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இந்த படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் உலகத்தரத்தில் இந்தப் படத்தை இயக்கி உள்ளதாகவும் அவருடன் மீண்டும் பணியாற்றியது தனக்கு மகிழ்ச்சி என்றும் நயன்தாரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் தனது கணவர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை சிறப்பாக தயாரித்து அதை சிறப்பாக வெளியிட்டதற்கு காதலுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் விமர்சனம் கொடுத்த பத்திரிகையாளர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் தனது நன்றியை என்றும் நயன்தாரா தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது
 
Edited by Mahendran