செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (11:33 IST)

ஏதனீர் மடாதிபதி மரணம்… பக்தர்கள் இரங்கல்!

கேரளாவில் உள்ள ஏதனீர் மடத்தின் அதிபதி கேசவானந்த பாரதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கேரளாவின் காசர்கோட் பகுதியில் உள்ளது எதனீர் மடம். இதன் சொத்துகளை அரசு கையகப்படுத்தியபோது அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் அந்த மடத்தின் அதிபதி கேசவானந்த பாரதி. இந்த வழக்கு மிக நீண்ட காலங்களுக்கு நடந்தது.

இந்நிலையில் 79 வயதான அவர் இன்று காலை திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.