காற்றை சுத்தப்படுத்தும் மாஸ்க்! – கொரோனாவோடு வாழ பழகும் தொழில்நுட்பம்!
உலகம் முழுவதிலும் கொரோனா கட்டுப்படுத்த முடியாத அளவில் பரவி வரும் நிலையில் காற்றை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் கொண்ட முகக்கவசங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனாவால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மக்கள் வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்ல வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். ஆனாலும் மாஸ்க் அணிவதால் கொரோனாவை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்தி விடவும் முடியாது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
இந்நிலையில் காற்றை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் கொண்ட புதிய வகை முகக்கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம். வீடுகளில் ஏர் பியூரிபயர்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை முகக்கவசத்தில் பயன்படுத்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்த மாஸ்குகள் சார்ஜ் செய்ய கூடியவையாகவும், 8 மணி நேரம் சார்ஜ் இருக்குமளவும் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வகை மாஸ்க்குகள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.