1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2017 (13:17 IST)

கழிவறையில் மிரட்டல் கடிதம்; விமானம் அசவரமாக தரையிறக்கம்

டெல்லியில் இருந்து மும்பை சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கழிவறையில் மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


 

 
ஜெட்  ஏர்வேஸ்க்கு சொந்தமான விமானம் டெல்லியில் இருந்து மும்பைக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் உள்ள கழிவறையில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், விமானம் கடத்தப்பட்டுள்ளதாக எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விமானம் உடனே அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது.
 
விமான பயணிகள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டனர். அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்ததால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள், தொலைபேசி மூலம் மிரட்டல் வந்ததால் விமானம் தரையிறக்கப்பட்டது என்று தெரிவித்தனர். 
 
மேலும் இந்த சம்பவம் குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் எந்த தகவலும் வெளியிடவில்லை.