ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (17:43 IST)

இளமையாக தோற்றமளித்த 41வயது பெண்ணிற்கு விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு

41 வயதில் இளமையாக தோற்றமளித்த பெண்ணை சந்தேகம் அடிப்படையில் விமானத்தில் பயணிக்க அனுமதிக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நட்டாலியா டெசன்கு என்ற பெண் துருக்கியில் இருந்து தனது வீட்டிற்கு செல்ல விமான நிலையம் சென்றுள்ளார். அங்கு பாஸ்போர்ட் கட்டுபாட்டில் இருந்த அதிகாரிகள் அவரை தடுத்துள்ளனர். அவர்கள் அந்த பெண்ணிடம் கூறிய காரணம் அவரை அதிர்ச்சி அடைய வைத்தது. அவர்கள் கூறியதாவது:-
 
நீங்கள் கொண்டுவந்த பாஸ்போர்ட்டில் 41 வயது என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தை விட 20 வயது இளமையாக உள்ளீர்கள். இதனால் நீங்கள் வேறொருவருடைய பாஸ்போர்ட்டில் பயணிக்க முயற்சி செய்கிறீர்கள் என்ற சந்தேகத்தினால் தடுத்தோம் என்று கூறியுள்ளனர்.
 
இதுகுறித்து நட்டாலியா கூறியதாவது:-
 
என்னுடைய இந்த இளமை தோற்றத்தால் பலரும் என்னை புகழ்ந்துள்ளனர். ஆனால் அந்த தோற்றமே எனக்கு ஆபத்தாய் அமையும் என நான் எதிர்பார்க்கவில்லை என்றார். நட்டாலியா தனது இளைமை தோற்றத்தால் பல ரசிகர்களை பெற்றுள்ளார். இருந்தும் இந்த சம்பவம் அவரது வாழக்கையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.