திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (11:18 IST)

கிரண்பேடியின் அதிகாரங்கள் ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

புதுச்சேரியின் ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

புதுச்சேரியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநருக்கும் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில அரசுக்கும் இடையில் பலப் பிரச்சனைகள் நடந்து வருகின்றன. ஆளுநர் அரசின் வேலைகளில் குறுக்கிடுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புகார் கூறியிருந்தார்.

இதையடுத்து அரசின் நடவடிக்கைகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் துணைநிலை ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பு வெளியாகியுள்ளது.