திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2023 (17:12 IST)

துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை துடைப்பத்தால் விரட்டிய வீரப்பெண்!

hariyana
அரியானாவில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம்  நபர்களை துடைப்பத்தால் துரத்தியடித்துள்ளார் வீரப்பெண் ஒருவர்.
 
அரியானா மாநிலம் பிவானி நகரின் டாபர் காலணியில் வசிப்பவர் ஹரிகிஷன். இவர்  நேற்றுக் காலையில் தன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார்.
 
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர்  அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவரை   நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.
 
உடனே ஹரிகிருஷ்ணன் வீட்டிற்குள் ஓடினார். அவர் மீது குண்டு பாய்ந்தது. மீண்டும் அவரை தாக்க அவர்கள் வந்தனர். அப்போது, ஒரு பெண் கையில் துடைப்பத்துடன் அவர்களிய தாக்குவதற்கு வந்தார். இதைப் பார்த்து 4 பேரும் ஓடிப்போயினர்.
 
இதுகுறித்த வீடியோ பரவலாகி வருகிறது. முன்பகை காரணமாக ஹரிகிஷனை கொலை  செய்ய முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறது.