1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2023 (15:45 IST)

உத்தரகாண்ட் விபத்து நடந்த சுரங்கத்தை கட்டியது அதானி குழுமமா? விளக்க அறிக்கை..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த சுரங்க விபத்தில் 41 தொழிலாளர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் மீட்க கடைசி கட்ட பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நிமிடங்களில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விபத்து நடந்த சுரங்கத்தை கட்டியது அதானி குழுமத்திற்கு சொந்தமான நிறுவனம் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
உத்தரகாண்ட் சுரங்க விபத்திற்கு எங்கள் நிறுவனத்தை தொடர்பு படுத்த சில தீய சக்திகள் முயற்சித்து வருகின்றன. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். உத்தரகாண்ட் சுரங்க கட்டுமானத்தில் அதானி குழுமத்திற்கோ,அதன் துணை நிறுவனங்களுக்கோ எந்த விதமான நேரடி மற்றும் மறைமுக தொடர்பு இல்லை. சுரங்க கட்டுமானத்தில் ஈடுபட்ட நிறுவனத்தில் எங்களுக்கு எந்தவித பங்கும் இல்லை என்று கூறியுள்ளது.

Edited by Mahendran