தொடர்புடைய செய்திகள்
- பிட்காயினுக்கு போட்டியாக களமிறங்கும் ஜியோ காயின்?
- இந்தியாவில் புழக்கத்தில் உள்ள பிட்காயின்: அதிர்ச்சியில் மத்திய அரசு!!
- ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது; சுமையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு
- பிட்காயின் மோகம்? என்ன சொல்கிறது நிதி அமைச்சகம்??
- பிட்காயின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?? அதிர வைக்கும் உண்மை...
பிட்காயின் எதிரொலி: டிஜிட்டலுக்கு மாறும் ஹவாலா பிஸ்னஸ்...
ஹவாலா பண பரிமாற்றம் தற்போது ஆன்லைன் முறைக்கு மாறி வருகிறது. இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவத்தனையான கிரிப்டோகரன்சி வகையை சார்ந்த பிட்காயினால் இந்தியாவில் ஹவாலா ஏஜென்ட்டுகள் பண மாற்றத்தை செய்து வருகின்றனர்.
ஹவாலா வழக்குகளை விசாரித்து வரும் டெல்லி உயர் அதிகாரி ஒருவர், ஹவாலா ஏஜென்ட்டுகள் பிட்காயின் முறையில் பணப்பரிமாற்றம் செய்வதை பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதன் மூலம் எளிதில் பணத்தை மாற்ற முடியும். மேலும், கைக்கு விரைவில் பணம் கிடைத்து விடும் என தெரிவித்துள்ளார்.
பிட்காயின் மதிப்பு இணையதளங்களில் உள்ள வாலெட்கள் முறையில் சேமிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் பிட்காயின் பரிவர்த்தனை நடைமுறையில் இல்லாததால் இது போன்ற ஹவாலா பண பரிமாற்றத்தை கண்டறிவது மிக கடினமான இருப்பதாகவும் தெரிகிறது.
பிட்காயின் பயன்பாடு சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதால் விசாரணை ஆணையங்களுக்கு இந்த பிட்காயின் சார்ந்த வழக்குகள் சவாலான விஷயமாக மாறி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
