பிட்காயினுக்கு போட்டியாக களமிறங்கும் ஜியோ காயின்?
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் கீழ் ஜியோ காயின் என்ற கிரிப்டோ கரன்சியை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிட்காயின். என்ற விர்ச்சுவல் பணம் இனையத்தில் மட்டுமே பரிமாற்றம் செய்யக்கூடியது. இது பங்குச்சந்தையில் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதை போன்றது. இதன் மதிப்பு ஆரம்பத்தில் எதிர்பாரத அளவுக்கு உயர்ந்தது.
ஆனால் எல்லோரும் பிட்காயின் பற்றி அறிந்து அதை பயன்படுத்த தொடங்கிய நிலையில் தற்போது அதன் அமதிப்பு 20% சரிந்துள்ளது. தென் கொரியாவில் பிட்காயினுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிட்காயின் பயன்படுத்துவது தனிநபர் உரிமை என்றும் இதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ காயின் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக 50 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று கிரிப்டோ கரன்ஸி பிளாக் செயின் தொழில்நுட்பத்தினை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.