செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2022 (18:04 IST)

12 வயதில் 3 செயலி: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற 8ஆம் வகுப்பு மாணவர்!

guinness
12 வயதில் 3 செயலி: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற 8ஆம் வகுப்பு மாணவர்!
12 வயதில் 3 மொபைலில் செயலிகளை செய்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகன் எட்டாம் வகுப்பு படிக்கும் கார்த்திகேய ஜாகர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆன்லைன் மொபைல் வாங்கினார்
 
அந்த மொபைல் மூலமே அவர் பல விஷயங்களை கற்றுக்கொண்டு செயலிகளை உருவாக்கினார். அவர் தற்போது மூன்று செயலிகளை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதனை அடுத்து உலகின் மிக இளைய வயது ஆப் டெவலப்பர் என்ற பெருமை அவருக்கு கிடைத்ததோடு அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில்  இடம் பெற்றுள்ளது
 
இதையடுத்து அந்த சிறுவரை அரியானா முதல்வர் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்