வெளிநாடுகளுக்கு தகவல் திருடிய செல்போன் செயலிகள்! – அதிரடியாக தடை செய்த மத்திய அரசு!
இந்திய செல்போன் பயனாளர்களின் தகவல்களை திருடி வெளிநாடுகளுக்கு வழங்கியதாக 300க்கும் மேற்பட்ட செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில் அனைவர் கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்யப்படும் ஒவ்வொரு செயலியும் பயனாளர்களின் தனிநபர் தகவல்களை சேமித்துக் கொள்கிறது.
இப்படியாக சேமித்த தனிநபர் தகவல்களை பல செயலி நிறுவனங்கள் வேறு நாடுகளின் சர்வர்களுக்கு கடத்துவதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 348 செல்போன் செயலிகளை தடை செய்துள்ளது. இதை அத்துறையின் ராஜாங்க மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.