செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 15 நவம்பர் 2021 (07:13 IST)

நவம்பர் 17 வரை பள்ளிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு

மாசு குறைபாடு காரணமாக டெல்லியில் ஒரு வாரம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் அதேபோல் அரசு அலுவலர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிடப்பட்டு உள்ளார்கள் என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது டெல்லியை அடுத்து அதன் அண்டை மாநிலமான ஹரியானா மாநிலத்தில் நவம்பர் 17ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம், பரிதாபாத் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றவும் தனியார் நிறுவனங்களும் கூடுமானவரை வீட்டிலிருந்து பணியாற்றவும் அரசு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியை அடுத்து ஹரியானாவிலும் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது