வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (07:23 IST)

ஹனுமன் ஒரு முஸ்லிமா? பா.ஜ.க. தலைவரின் சா்ச்சை கருத்தால் பரபரப்பு

கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்ததில் இருந்தே அக்கட்சியினர் பலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது ஹனுமன் ஒரு முஸ்லீம் என பாஜக தலைவர் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. தலைவா்களில் ஒருவர் புக்கல் நவாப். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, அா்மான், ரஹ்மான், பா்மான், ஜிஷான், ரெஹான் என்ற பெயா்கள் இஸ்லாமிய மதத்தில் அழைக்கப்படுகிறது. இதை ஒட்டியபடி ஹனுபன் என்ற பெயரும் உள்ளதால்  ஹனுமன் ஒரு இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்தவா். அவரை உலகின் அனைத்து மதத்தினரும், ஒவ்பொரு பிரிவினரும் நேசிக்கின்றனா். இதில் என்னுடைய நம்பிக்கையின்படி ஹனுமன் ஒரு முஸ்லிம் தான் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், 'ஹனுமன் ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்று பேசியதன் சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில் தற்போது அவர் ஒரு முஸ்லீம் என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புக்கல் நவாபின் இந்த கருத்துக்கு பெரும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன..