புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 டிசம்பர் 2018 (20:25 IST)

விஷ பிரசாதம் விவகாரம்: தலைமறைவாக இருந்த மடாதிபதி காதலியுடன் கைது

கடந்த சில நாட்களுக்கு முன் பிரசாதத்தில் விஷம் கலந்ததால் 15 பேர் மரணம் அடைந்த சம்பவத்திற்கு காரணமாக இளைய மடாதிபதி ஒருவர் காதலியுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் உள்ள கோவில் ஒன்றில் பூஜை நடந்த பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டிருந்ததால் 15 பக்தர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த விஷ பிரசாதம் விவகாரத்தில் சாளுர் மடத்தின் இளைய மடாதிபதி மகா தேவசாமி என்பவரை போலீசார் தேடி வந்தனர். சற்றுமுன் அந்த இளையமடாதிபதி தனது காதலி அம்பிகாவுடன் கைது செய்யப்பட்டதாக கர்நாடக தொலைக்காட்சி செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற நடந்த போட்டியின் காரணமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதாக இளைய மடாதியிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொடூர செயலுக்கு உடைந்தையாக இருந்ததாக இளைய மடாதிபாதியின் காதலி அம்பிகா உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.