1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (14:53 IST)

ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!!

2024-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


 
ஆண்டுதோறும் இஸ்லாமிய புனித தலமான மக்காவிற்கு செல்லும் ஹஜ் புனித யாத்திரை இஸ்லாமிய மக்களிடையே முக்கியமான ஒன்றாக உள்ளது. இஸ்லாமியர்களின் கடமைகளில் ஹஜ் புனித யாத்திரை ஒருமுறையாவது செல்ல வேண்டும். ஆண்டுதோறும் ஹஜ் புனித யாத்திரை செல்ல பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.

2024-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 15-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.